அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் சமூக வலைதளங்களில் யாரையும் நாகரீகமற்ற முறையில் விமர்சிக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு எனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது; எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். சமூக வலைதள நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சிக்காக உழைப்போருக்கு அங்கீகாரம் தரப்படும் என அவர் தெரிவித்தார்.