பொறியியல் சேர்க்கை: 2,81,266 மாணாக்கர்கள் பதிவு

67பார்த்தது
பொறியியல் சேர்க்கை: 2,81,266 மாணாக்கர்கள் பதிவு
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 2,81,266 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 1,20,807 மாணவர்களும், 1,00,579 மாணவிகள் பதிவு செய்துள்ளனர். அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் 6ஆம் தேதி கடைசி நாள் என்பதால் மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.