ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும்

79பார்த்தது
ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும்
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி