ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விநாயக் குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அங்கு, இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பொங்கல் பரிசாக, நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் கார்த்திக், கண்ணன், பழனிமுருகன் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.