எலான் மஸ்க், வரிக்குறைப்பு மசோதாவுக்கு வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். என்.பி.சி நியூஸ் சேனலுக்கு பேட்டியளித்த டிரம்ப், "மஸ்க் மரியாதையற்றவர். தங்கள் உறவு முடிந்துவிட்டது. அவருடான உறவை சரிசெய்ய எந்த விருப்பமும் இல்லை. அவருடன் பேச எந்த நோக்கமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.