அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை தொழிலதிபர் எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்க கட்சி தொடங்கி இருப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் அதிபரான மஸ்க், டிரம்ப் ஆட்சிக்கு வர பெரிதளவில் உதவியாக இருந்தார். அண்மைக்காலமாக இருவருக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் புதிய கட்சியை மஸ்க் தொடங்கியுள்ளார்.