அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் ஆகியோர் கடந்த சில நாட்களாக பொது வெளியில் பகிரங்கமாக கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்பான பதிவுகளுக்காக வருந்துவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மஸ்க் வெளியிட்ட பதிவில், “கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நான் கூறிய சில கருத்துகளுக்காக நான் மனம் வருந்துகிறேன். அவை, மிகவும் மோசமான கருத்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.