அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோர் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது ட்ரம்ப் குறித்த தனது கருத்துகளுக்காக எலான் மஸ்க் மன்னிப்புக் கோரியுள்ளார். சிறுமிகள் பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பான ரகசிய ஆவணத்தில் ட்ரம்ப் பெயர் இருப்பதாக மஸ்க் பரபரப்பை கிளப்பியிருந்தார். இதற்கு பதிலடியாக டெஸ்லா குழுமத்திற்கான அரசின் மானியங்களை நிறுத்தப் போவதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மஸ்க் மன்னிப்புக் கேட்டுள்ளார்.