சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

59பார்த்தது
சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று (ஜன. 05) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 59 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் யார்டில் நடைமேம்பாலம் கட்டுமானப்பணி நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை வழக்கம் போல மின்சார ரயில் சேவை இயக்கப்படும். ரயில்கள் ரத்து காரணமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி