ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பு (FADA) வெளியிட்ட தரவுகளின்படி, மே 2025 மாதத்தில் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மே 2025ல், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 100,345 யூனிட்களை எட்டியது. இது ஏப்ரல் 2025 இல் 91,791 யூனிட்கள் விற்பனையானதை விட 9.32 சதவீதம் அதிகமாகும். மே 2024-ல் 77,330 யூனிட்கள் விற்பனையானதை விட, இது 29.76 சதவீத வளர்ச்சியாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனங்களுக்கான சந்தைப் பங்கு இப்போது 6.1 சதவீதமாக உள்ளது.