தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு கடந்த 2011 தேர்தலின் போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏ.வ. வேலு மீதான வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு குறித்து போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவித்து நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.