விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் பதிவில், 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றில் முக்கியமானது வாக்குப் பதிவு சதவீத உயர்வு. அதன் விளைவாக பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றது என்ற தகவலை ‘வோட் ஃபார் டெமாக்ரஸி’ என்னும் அமைப்பு இப்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்திகள் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.