பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான அல்லு அரவிந்திடம், ரூ. 101.4 கோடி வங்கி மோசடி மற்றும் பண மோசடி தொடர்பாக, 3 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட கடன்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம் வங்கியை மோசடி செய்ததாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.