சென்னை ஈசிஆரில் நள்ளிரவில் சொகுசு காரில் வந்த இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முட்டுக்காடு பகுதியில் காரை பின்னோக்கி எடுத்த போது இளைஞர்களின் சொகுசு காரில் பெண்கள் வந்த கார் உரசியது. அவர்களை அழைத்தும் நிற்காமல் சென்றதால் பெண்கள் சென்ற காரை இளைஞர்கள் துரத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.