தர்மபுரி: அரூர் அருகே புளுதியூரில் புதன்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரசந்தை நடக்கிறது. இங்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்து செல்கின்றனர். மாடுகள் ரூ.6,700 முதல் ரூ.47,000 வரையும், ஆடுகள் ரூ.4,000 முதல் ரூ.12,500 வரை மொத்தம் ரூ.57 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், பக்ரீத் பண்டிகையையொட்டி விற்பனை விறுவிறுப்பாக நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.