அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் அதில் உள்ள கலோரிகளால் உடல் எடை அதிகரிக்கும். அதிக கொழுப்பு இருப்பதால் ரத்தத்தில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகரிக்கும். இது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எண்ணெய் பலகாரங்கள் செரிமானத்துக்கு கஷ்டமா இருக்கும். அதனால, அதிகமா சாப்பிட்டா, வயிற்று வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் வரும். பலகாரங்களை அதிக வெப்பநிலையில் பொரித்தால் சில நச்சுப் பொருட்கள் உருவாகும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.