ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட
நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த இயற்கை பேரிடர் காரணமாக இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலநடுக்கத்தால் 6 கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.