சென்னை: மாம்பக்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இரு தினங்களுக்கு முன்னர் பதிவான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாரில் வேலை செய்யும் நபர்களுக்கும், மது குடிக்க வந்த மதுபிரியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பார் ஊழியர்களை மதுபோதையில் இருந்த கும்பல் கத்தியை கொண்டு சரிமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.