சென்னை: போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான், ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த ஜாமீன் குறித்த விசாரணை நாளை (டிச.24) போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.