தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே போதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கேரளா நோக்கி லாரி ஒன்று கனிம வளங்கள் கொண்டு சென்றது. அந்த லாரியை மறித்த மது பிரியர், குத்தாட்டம் போட்டார். இறுதியில் மண்ணை வாரி தூற்றுவது போல செய்தார். இந்த ரகளையால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.