சென்னையில் புறநகர் மின்சார ரயிலில் போதை ஆசாமி ஒருவர், அநாகரிக செயலில் ஈடுபட்ட சம்பவம் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயிலில் ஏறிய போதை ஆசாமி ஒருவர் பெண்கள், குழந்தைகள் முன் அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பெண் பயணி ஒருவர், ரயில்வே பாதுகாப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது அழைப்பு கிடைக்கவில்லை. பிறகு ‘139’ என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டால் இந்தியில் பேசியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் பயணிகள் திகைத்துள்ளனர்.