வேனுக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பலி

78பார்த்தது
வேனுக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பலி
தனியார் நிறுவனம் சம்பளத்தை குறைத்ததால் விரக்தியடைந்த டிரைவர், தான் ஓட்டி வந்த வேனுக்கு தீ வைத்ததில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் புனே அடுத்த ஹிஞ்சவாடியில் நடந்துள்ளது. ஜனார்தன் என்பவர் தான் வேலை பார்த்து வந்த நிறுவனம் மீதான வெறுப்பை தீர்த்துக்கொள்ள இந்த கொடூரத்தை செய்துள்ளார். தீ வைத்த பிறகு, ஓடும் வேனில் இருந்து குதித்தார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ஜனார்த்தனை போலீசார் கைது செய்தனர். வேனில் இருந்த மேலும் 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி