ஈரோடு அருகே இன்ஸ்டா பிரபலம் ராகுல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சென்டர் மீடியாவில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், “ஆரம்பத்தில் என் கணவர் நன்றாக தான் இருந்தார். உடல் வலிக்காக மது அருந்த போவதாக கூறியதற்கு அவருடைய அம்மா தடுக்காமல் இருந்துள்ளார். அதனால் அவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். என்னுடைய கணவர் முகத்தை கூட கடைசியா என்னை பார்க்க விடல, போன் பண்ணி மிரட்டுறாங்க” என தெரிவித்துள்ளார்.