கர்நாடக மாநில
காங்கிரஸ் அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத
திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக
பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக
காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல்,
அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுகவின் துரோக வரலாறு மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.