பிரதமர் மோடி, டெல்லியில் இன்று (ஜூன் 24) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பேசிய அவர், "இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளுக்காக வெளிநாடுகளை நம்பியிருந்த காலம் மெல்ல முடிவுக்கு வருகிறது. தற்போது பாதுகாப்புத் துறையில் நாம் தன்னிறைவு பெற்று வருகிறோம். எதிர்காலத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் உலக நாடுகளுக்கு வழங்கும் நிலை வரும்" என்றார்.