போலி லிங்க் மூலம் இணைய மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. IPL தொடரில் RCB அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் AIRTEL, JIO, VI நிறுவனங்கள் பெயரில் சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் என பலருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் வருகிறது. நாமும் ஆசைப்பட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை தொட்டால், நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும். பணமும் பறிபோகும். பொதுமக்கள் கவனமாக இருக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.