வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில், 3 பேர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தை செய்துள்ளதாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.