வக்பு சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். நெருப்புடன் விளையாட வேண்டாம் என மஜத தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "இந்தியாவிலேயே ராணுவம், ரயில்வேத்துறை நிர்வாகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சொத்துகளை கொண்டது வக்பு வாரியம். நாடு முழுவதும் 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சொத்துக்கள் உள்ளன. இதில் 3ல் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதை மீட்டு பராமரித்தால் ஆண்டு வருவாய் ரூ.1000 கோடியை தாண்டும். இவற்றை சீர்குலைக்கும் நோக்கிலேயே மத்திய பாஜக அரசின் புதிய அணுகுமுறைகள் உள்ளன” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.