கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சம் வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள வீடியோவில், "மற்ற லட்சக்கணக்கான வைரஸ் தொற்று போன்றுதான் கொரோனாவும் அவ்வப்போது வரும். கொரோனா தொற்று முழுமையாக அழிக்கப்படவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. கொரோனாவால் யார் பாதிக்கப்படுகிறார்கள், எந்த அளவுக்கு வீரியமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.