இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் அமைவதில்லை. அவர்கள் 6-6-6 என்ற விதியைப் பின்பற்றலாம். அதாவது 6 நிமிடங்கள் வார்ம் அப் செய்து, காலை அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து, 6 நிமிடங்கள் ஓய்வுடன் இந்தப் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இதயம் உட்பட உறுப்புகளுக்குச் சீரான இரத்த ஓட்டம் கிடைக்கிறது. கலோரிகளையும் கொழுப்புகளையும் எரிப்பதற்கு 60 நிமிட நடைப்பயிற்சி போதுமானது.