"தனிப்பட்ட முறையில் நடைபெறும் விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம்”

55பார்த்தது
"தனிப்பட்ட முறையில் நடைபெறும் விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம்”
தனிப்பட்ட முறையில் நடைபெறும் விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குற்றம் சுமத்தலாம். சம்பவம் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுத்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்துகிறார்கள். தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்பதால் தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நம் மாநிலத்தில் நடைபெறுகின்றன” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி