தினசரி நாம் சாப்பிடும் சில உணவுகள் உடல்நலத்திற்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உப்பும் எண்ணெயும் கொண்ட ஜங்க் உணவுகள், பாட்டிலில் கிடைக்கும் பானங்கள், செயற்கை இனிப்புகள், தீவிர சுவையூட்டிகள் கொண்ட பதார்த்தங்கள் ஆகியவை நீண்டகாலத்தில் இருதய நோய், நீரிழிவு, சர்க்கரை, கல்லீரல் பிரச்சனை போன்றவை ஏற்படச் செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சுவைக்காக இது மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது ஆபத்தானது.