"அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்" - விஜய் அறிக்கை

69பார்த்தது
"அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்" - விஜய் அறிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மூலம் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். திமுக அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள் விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு தவெக சார்பாக, முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி