காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!

78பார்த்தது
காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!
காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், "காய்ச்சல் உள்ள மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். காய்ச்சல் இருந்தால் அது மற்ற மாணவர்களுக்கும் பரவக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பொறுத்து பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி