லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இன்று நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கு “நீங்களே போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்?. புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?. உங்களிடம் கேள்வி கேட்டால், பாஸ் என்று எல்லாம் சொல்லக்கூடாது, ஆம் அல்லது இல்லை என்றும் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்” என நீதிபதி P.T. ஆஷா சரமாரி கேள்வி எழுப்பினார்.