கொரோனா பாதிப்பு குறித்து பயம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "நேற்று வரை தமிழ்நாட்டில் 236 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சளி, காய்ச்சல் பாதிப்புடன் இருந்து குணமடைகிறார்கள். சுகாதாரத்துறை கண்காணிக்கிறது. மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என தெரிவித்தார்.