வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை கடித்துக்கொன்ற நாய்கள்

58பார்த்தது
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை கடித்துக்கொன்ற நாய்கள்
கேரளம்: தகழி பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (81) தனது மகன் வீட்டிற்கு நேற்று (டிச. 25) சென்ற நிலையில் வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் கார்த்தியாயினியை கடித்து குதறின. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி