மும்பையில், லிஃப்டில் சென்ற பக்கத்து வீட்டுக்காரரை, வளர்ப்பு நாய் கடித்த விவகாரத்தில், நாயின் உரிமையாளருக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றம் ரூ.4,000 அபராதமும் விதித்தது. இந்த சம்பவம் 7 ஆண்டுகளுக்கு முன்பு 2018ஆம் ஆண்டு வோர்லியில் நடந்ததாக கூறப்படுகிறது.