விசிக தலைவர் திருமாவளவன், இன்று (ஜூலை 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "திமுக பற்றி பேசிய விஜய், அதிமுக பற்றி பேசாதது ஏன் என தெரியவில்லை. தவெகவின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா? இல்லையா? அதிமுகவை விஜய் விமர்சிக்கிறாரே தவிர, கொள்கை எதிரியாக குறிப்பிடவில்லை என்றே தோன்றுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை பலரும் எதிர்ப்பது இயல்பான ஒன்றுதான்" என தெரிவித்துள்ளார்.