சீனாவில் அலுவலக நேரத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்டதால் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, வாங் என்ற பெண் தந்து நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். எச்சரிக்கை கொடுக்காமல் பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என கூறிய நீதிமன்றம், அவருக்கு இழப்பீடும் வழங்குமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதே போல பலரும் தங்களது வேலை பறிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.