வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நமது உடலில் இருக்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். வேர்க்கடலையை அளவோடு சாப்பிட்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பல ஆராய்ச்சிகளில் வேர்க்கடலை கெட்டக் கொழுப்பை குறைப்பதிலும், நல்ல கொழுப்பை அதிகரிப்பதிலும் திறம்பட செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சோடியத்தின் அளவு இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும். எனவே அதிக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.