மலையாள சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் மம்முட்டி. தமிழ் சினிமாவிலும் அழகன், தளபதி, ஆனந்தம் என பல படங்களில் நடித்துள்ளார். மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல் காட்டுத் தீயாக பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மம்முட்டி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மம்முட்டிக்கு புற்றுநோய் இல்லை, அவர் நலமுடன் இருக்கிறார். ரம்ஜான் நோன்பில் இருப்பதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.