மராட்டிய மாநிலம் லாத்தூர் உட்கிர் அரசு மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு கூடுதல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் மருத்துவர் சசிகாந்த் தேஷ்பாண்டே. இவர் ஜூனியர் மருத்துவருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், மருத்துவமனை படுக்கை நிரம்பி விட்டதால், சிகிச்சையில் இருக்கும் ஒரு கொரோனா நோயாளியை கொன்று விடுமாறு கூறியதாக தெரிகிறது. இந்த ஆடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இதன் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.