அசாம்: மணிப்பூரைச் சேர்ந்த அடிகுர் ரகுமான் (28) என்ற இளைஞர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக, கச்சார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பயாப்ஸி பரிசோதனையின் போது ரகுமானின் அனுமதியின்றி அவரது பிறப்புறுப்பை அகற்றியுள்ளனர். மயக்கம் தெளிந்தபோதுதான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவான மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.