மருத்துவமனை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மருத்துவர் பலி

18847பார்த்தது
மருத்துவமனை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மருத்துவர் பலி
கொச்சி அமிர்தா மருத்துவமனையின் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவர் உயிரிழந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இடுக்கி அடிமாலி பகுதியைச் சேர்ந்த டாக்டர் லக்ஷ்மி விஜயன் (32) என்பவர் இன்று காலை 5 மணிக்கு உயிரிழந்தார். டெல்லியில் நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், இவரும் இவரது தாயும் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், 3வது மாடியில் இருந்து 8வது மாடியில் உள்ள கழிவறைக்கு செல்லும் போது, தவறி விழுந்துள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி