உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வேண்டுமா?

42923பார்த்தது
உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வேண்டுமா?
இந்தியாவில் ஆதார் அட்டை எண் என்பது எல்லாருக்குமே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில், உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்க பிறப்பு சான்றிதழ் நகல் எடுத்து அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் ஆதார் பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். பின்னர், ஆதார் பதிவு மையத்தில் உங்களது குழந்தையின் புகைப்படத்தை எடுப்பார்கள். மேலும், பெரியவர்களுக்கு எடுப்பது போன்று குழந்தைகளுக்கு அவர்களின் கைரேகைகள் மற்றும் விழித்திரை ஸ்கேன் எடுக்க மாட்டார்கள். அதற்கு மாற்றாக பெற்றோர்களின் அடையாள ஆவணத்தைக் காட்டி கைரேகை எடுத்துக்கொள்வார்கள்.ப் அவ்வளவு தான் புதிய ஆதார் விண்ணப்பிக்கும் பணி முடிந்தது. சில நாட்கள் கழித்து UIDAI இணையதளத்தில் இருந்து உங்களது குழந்தையின் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி