மவுத்வாஷ் திரவத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், உடல் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து 3 மாதங்கள் மவுத்வாஷ் பயன்படுத்தினால், ஈறு பிரச்சனையுடன், பெருங்குடல் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ்களைப் பயன்படுத்தினால் வாய் வறண்டு போகும் என்றும், மவுத்வாஷில் இருக்கும் ஆல்கஹால் உமிழ்நீரைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.