தற்போதைய காலத்தில் சிலர் தங்களை இன்ட்ரோவெர்ட் எனக்கூறிக் கொண்டு தனிமையில் இருப்பதை விரும்புகின்றனர். ஆனால் தனிமையில் இருப்பவர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. தனிமையில் இருப்பவர்களுக்கு முன்கூட்டியே மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மனச்சோர்வு, பிற மனநல பிரச்சனைகளையும், அல்சைமர் போன்ற நோய்களையும் உருவாக்குவதாகவும், இறப்பு விகிதத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகிறது.