நமக்கு குளிர்காலங்களில் அதிகளவு பேய் கனவு வருவதாக ஜேர்மன் மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் மார்ட்டின் சீல் கூறுகையில், “குளிர்காலத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் குறுகிய பகல் பொழுது இருக்கும். இதனால், உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கிறது. மெலடோனின் என்பது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன். அதன் அதிகரித்த அளவுகள் ஆழ்ந்த தூக்கம் மற்றும் அதிக கனவுகளுக்கு வழிவகுக்கும்” என்றார்.