இந்திய ரயில்வேயில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் அதிக வருவாய் ஈட்டும் ரயிலாக உள்ளது. பெங்களூர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலானது வருவாயில் முதலிடத்தில் உள்ளது. 2022-2023 வரை இந்த ரயில் 5,09,510 பயணிகளை ஏற்றிச் சென்றது. இதன் மூலம் ரயில்வேக்கு சுமார் ரூ.1,76,06,66,339 வருவாய் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கொல்கத்தாவையும் புதுடெல்லியையும் இணைக்கும் சிலாய்தா ராஜதானி உள்ளது. 2022-2023ல் இந்த ரயில் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,28,81,69,274 ஆகும்.